Jun 02, 2018 09:33 AM
விபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை!

திரைப்படங்கள் போலவே டிவி சீரியல்களும், அதில் நடிப்பவர்களும் மக்களிடம் ரொம்பவே பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில், மக்களின் பெரு வரவேற்பை பெற்ற டிவி சீரியலாக ‘வாணி ராணி’ உள்ளது.
நடிகை ராதிகா தயாரித்து, இரட்டை வேடங்களில் நடித்து வரும் இந்த சீரியலில், நடித்து வரும் சங்கீதா என்ற நடிகை விபச்சார வழக்கில் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் அருகே விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததாம். இதனைத் தொடர்ந்து பாலியல் தொழில் தடுப்பு பிரிவு அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில், அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சீரியல் நடிகை சங்கீதாவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. அவர் மேலும், பல பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.