அவசரம் காட்டும் விக்னேஷ் சிவன்! - அமைதி காக்கும் நயந்தாரா

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயந்தாராவும் காதலித்து வருகிறார்கள். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றாலும், திருமணத்தை நயந்தாரா தள்ளிப்போடுவதாக கூறப்படுகிறது.
தற்போது, ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கும் நயந்தாரா, அப்படங்களை முடித்துவிட்ட பிறகே திருமணத்தைப் பற்றி யோசிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், திருமணத்திற்கு அவசரம் காட்டுவதை விக்னேஷ் சிவன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்ற பாடல் நேற்று வெளியானது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த பாடல் வரியான ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்று பதிவு செய்து, வெய்ட் பண்ணவா என்று கேள்வி கேட்டிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
இதன் மூலம் திருமணத்திற்கு விக்னேஷ் சிவன் அவசரம் காட்டுவதும், நயந்தாரா அமைதி காப்பதும் தெரிகிறது. திருமணம் ஆகவில்லை என்றாலும், சென்னையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.