Oct 27, 2018 06:10 AM

விஜய் போஸ்டர் ஏற்படுத்திய சர்ச்சை - மதுரையில் பரபரப்பு

விஜய் போஸ்டர் ஏற்படுத்திய சர்ச்சை - மதுரையில் பரபரப்பு

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பேனர்கள் வைப்பதோடு, வார்த்தையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளவும் செய்வார்கள். இப்படி நடிகர்களின் ரசிகர்களுக்குள் இருக்கும் இந்த மோதல் தற்போது அரசியல் கட்சிகளை தாக்கி பேசும் அளவுக்கு சென்றிருக்கிறது.

 

அதிலும், விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருப்பதால், அவரது ரசிகர்களும் அவ்வபோது அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டார்கள்.

 

இந்த நிலையில், மதுரையில் ‘சர்கார்’ படத்திற்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் ஒன்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு, விஜய்க்கு பிரச்சினையையும் உருவாக்கியுள்ளது.

 

அந்த போஸ்டரில், “தமிழக மக்களின் மீது அக்கறை இல்லாத ஆளுங்கட்சி, எதற்கும் உதவாத எதிர் கட்சி, அமையட்டும் தளபதியின் சர்கார் நல்லாட்சி” என்று வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தை படித்த ஆளுங்கட்சி தொண்டர்களும், எதிர்க்கட்சி தொண்டர்கள் விஜய் மீது பெரும் கோபமடைந்துள்ளனர்.

 

Sarkar Poster

 

ஏற்கனவே, கதை திருட்டு விவகாரத்தால் சர்கார் படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இப்படி ஒரு வாசகத்தோடு போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது விஜய்க்கு புதிய பிரச்சினையை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.