May 19, 2018 08:01 AM
ஆர்யாவை தொடர்ந்து விஷாலும் சின்னத்திரையில் எண்ட்ரியாகிறார்!

நடிப்பு, திரைப்பட தயாரிப்பு என்று இருக்கும் விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பொறுப்புகளில் இருப்பதோடு, அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் ஆர்யாவைப் போல விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் விஷால் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் எப்படி டிவி நிகழ்ச்சியை தனது அரசியல் பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறாரோ அதுபோல விஷாலும், டிவி யை தனது அரசியல் பயணத்திற்காக பயன்படுத்த இருப்பதாகவும், அவர் டாக் ஷோ ஒன்றை தொகுத்து வழங்க இருப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.