Sep 06, 2018 03:39 AM

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ஏன்? - மனம் திறந்த டேனியன்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ஏன்? - மனம் திறந்த டேனியன்

கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் -வில் டைட்டில் வெற்றியாளர்களாக கருதப்பட்டவர்களில் டேனியல் ஒருவர். திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து முன்னேற்றம் கண்டு வரும் டேனியல், பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதும் மக்களை கவர்ந்துவிட்டார்.

 

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிடையே கடும் சவால் அளிக்கும் போட்டியாளராக திகழ்ந்த டேனியல், கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

 

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் இருந்து தான் வெளியேறியதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் டேனியல், தன், அம்மாவும் தன் காதலியும் உள்ளே வந்து பார்த்துவிட்டு சென்ற பிறகு டாஸ்கில் கவனம் செலுத்த முடியாததால் தான் போட்டியில் இருந்து வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், கடந்த சில நாட்களாக மஹத்துடன் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு போட்டியின் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதாகவும் கூறியிருக்கும், அவர் தனக்கு 50 லட்சம் மக்களின் அன்பே போதுமானது, என்றும் தெரிவித்துள்ளார்.

 

சினிமாவில் நடித்து வந்த போது கிடைக்காத பாப்புலாரிட்டி பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றதற்கு பிறகு கிடைத்திருப்பதாக கூறும் டேனியல், விரைவில் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறாராம்.