Dec 21, 2019 03:15 AM

‘கைலா’ விமர்சனம்

ce623358d2dca8df2458a2730031c404.jpg

Casting : Baskar Seenuvasan, Thana Nayudu, Kousalya, Baby Kaila, Anbalaya Prabhkaran

Directed By : Baskar Seenuvasan

Music By : Sravan

Produced By : Baskar Seenuvasan

 

அறிமுக இயக்குநர் பாஸ்கர் சீனுவாசன் இயக்கத்தில், அறிமுக நடிகை தானா நாயுடு நடிப்பில் வெளியாகியிருக்கும் திகில் படமான ‘கைலா’ எப்படி என்று பார்ப்போம்.

 

பேய்கள் குறித்து ஆராய்ச்சி செய்து கதை எழுத விரும்பும் நாயகி தானா நாயுடு, அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருக்கும் வீடு ஒன்றில் பேய் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். ஒரு அம்மாவும், சிறுமியும் தற்கொலை செய்துக் கொண்ட அந்த வீட்டில் அவர்களது ஆவி இருப்பதாக மக்கள் கூற, அந்த வீட்டு அருகே இரண்டு தொழிலதிபர்கள், ஒரு காவல் துறை அதிகாரி மர்மமான முறையில் இறக்கிறார்கள். அவர்களை பேய் தான் கொலை செய்தது என்று ஊரே சொல்ல, காவல் துறை அதிகாரியான அன்பாலயா பிரபாகரன், அதன் பின்னணியில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். நாயகி தானாவும் இது குறித்த ஆய்வில் இறங்குகிறார். இறுதியில், அந்த வீட்டில் பேய் இருப்பது நிரூபிக்கப்பட்டதா, அந்த கொலைகளுக்கான பின்னணி என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

அறிமுக நடிகை தானா நாயுடு, அமைதியாக நடிப்பதோடு அழுத்தமாகவும் நடித்திருக்கிறார். ஆனால், எல்லாம் காட்சிகளிலும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷோனோடு அவர் நடித்திருப்பது சில இடங்களில் சலிப்படைய செய்துவிடுகிறது.

 

படத்தை இயக்குவதோடு வில்லனாக நடித்திருக்கும் பாஸ்கர் சீனுவாசனுக்கு வில்லனுக்கு தேவையான அத்தனை அமசங்களும் நிறைவாக இருக்கிறது. அவருடைய தோற்றமும், பார்வையுமே மிரட்டலாக இருக்கிறது.

 

Kailaa Review

 

கெளசல்யா, குழந்தை நட்சத்திரம் கைலா, அன்பாலயா பிரபாகரன் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரது கதாபாத்திரமும் கச்சிதமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

 

பரணி செல்வதின் ஒளிப்பதிவு திகில் படத்திற்கு தேவையான அனைத்தையும் நிறைவாக கொடுத்திருக்கிறது. ஸ்ரவனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான். பின்னணி இசையும் நம்மை திகிலடைய செய்கிறது.

 

படம் பார்க்கும் ரசிகர்களை பயமுறுத்துவதோடு, அடுத்து என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தும் விதமாக இயக்குநர் பாஸ்கர் சீனுவாசன் திரைக்கதை அமைத்திருக்கிறார். தொடர் கொலைகளின் பின்னணி என்னவாக இருக்கும், என்ற சஸ்பென்ஸை க்ளைமாக்ஸில் உடைப்பது, எதிர்பாராத திருப்புமுனை.

 

பட்ஜெட் காரணமாக படத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை இயக்குநர் நேர்த்தியாகவே சொல்லியிருக்கிறார்.

 

வழக்கமான பேய் படமாக கதை நகர்த்தப்பட்டாலும், க்ளைமாக்ஸில் வரும் திருப்புமுனையால் வித்தியாசமான பேய் படமாக படம் முடிகிறது.

 

ரேட்டிங் 2.5/5