Aug 31, 2019 06:09 AM

‘மயூரன்’ விமர்சனம்

d2845de2d63d2b0167bc90c64c9b3754.jpg

Casting : Anjan, Smitha

Directed By : Nandha Subrayan

Music By : Jubin

Produced By : அசோக்குமார், ராமன், சந்திரசேகரன், கார்த்திக்

 

அறிமுக நடிகர் அஞ்சன், ஸ்மிதா கே.டோக்ரா, ஆனந்த் சாமி, வேலராமமூர்த்தி ஆகியோரது நடிப்பில், நந்தா சுப்புராயன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மயூரன்’ எப்படி என்று பார்ப்போம்.

 

கல்லூரியில் படிக்கும் ஹீரோ அஞ்சன், ஹாஸ்டலில் தங்குகிறார். அப்பகுதியில் உள்ள ஹீரோயின் ஸ்மிதா மீது அவருக்கு காதல் வருகிறது. ஹீரோயினுக்கும் காதல் வர, இருவரின் காதல் திருமணம் வரை செல்கிறது. அப்பகுதியில் பெரிய ரவுடியாக இருக்கும் வேலராமமூர்த்திக்கு வலது கையாக இருக்கும் ஆனந்த் சாமி, வட மாநில பையன் ஒருவனை வைத்துக் கொண்டு, கல்லூரி ஹாஸ்டலில் போதை மருந்து வியாபாரம் செய்கிறார். அப்போது, ஹீரோ அஞ்சனின் நண்பனை ஆனந்த் சாமி கொலை செய்துவிட, அதுக்கு பழிக்கு பழியாக ஹீரோ அஞ்சன் ஆனந்த் சாமியை கொலை செய்துவிடுகிறார். இதனால், அஞ்சனை கொலை செய்ய முடிவு செய்யும் வேலராமமூர்த்தி, அவரை தேட, அவரிடம் அஞ்சன் சிக்கினாரா இல்லையா, அவரது காதல் என்ன ஆனது, என்பது தான் கதை.

 

ஹீரோ அஞ்சன் அறிமுக நடிகர் என்றாலும், தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார். ஹீரோயின் ஸ்மிதா கே.டோக்ராவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், கிடைத்த சிறிய வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். வேலராமமூர்த்தியின் மிரட்டலான நடிப்பும், அவரது கதாபாத்திரமும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னை கச்சிதமாக பொருத்திக் கொள்ளும் ஆனந்த் சாமி, வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

 

பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த நந்தா சுப்புராயன், கல்லூரி ஹாஸ்டல்களில் நடக்கும் இருட்டு சம்பவங்களை, வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

 

முதல் பாதி வழக்கமான காதல், காமெடி என்று நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையில் வரும் திருப்புமுனையால் படம் விறுவிறுப்படைகிறது.

 

பரமேஸ்வரின் ஒளிப்பதிவும், ஜூபினின் இசையும் கதைக்கு ஏற்பட பயணித்திருக்கிறது. 

 

படத்தில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்களாக இருந்தாலும், அவர்களிடம் இயக்குநர் திறம்பட வேலை வாங்கியிருப்பதோடு, தான் சொல்ல வந்ததை வழக்கமான பாணியோடும், வழக்கத்திற்கு மாறான சில வித்தியாசமான முயற்சியோடும் சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘மயூரன்’ கவனிக்கப்பட வேண்டியவன்.

 

ரேட்டிங் 2.5/5