Nov 11, 2019 05:52 AM

’தளபதி 64’ படத்தில் இணைந்த ‘96’ நடிகை!

’தளபதி 64’ படத்தில் இணைந்த ‘96’ நடிகை!

விஜயின் 64 வது படமாக உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல மலையாள நடிகர் வர்கீஸ், சாந்தனு, விஜே ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

இந்த நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றி பெற்ற ‘96’ படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்த கவுரி கிஷனும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

 

கவுரி கிஷன் விஜய் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அதை கவுரி கிஷனே உறுதிப்படுத்தியுள்ளார்.

 

Actress Gowri Kishan

 

சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை விஜயின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரிக்க, சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் ‘கைதி’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.