Mar 29, 2018 04:07 AM

விமான விபத்து - நூலிழையில் உயிர் பிழைத்த நடிகை ரோஜா!

விமான விபத்து - நூலிழையில் உயிர் பிழைத்த நடிகை ரோஜா!

பிரபல நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏ-வுமான ரோஜா நூழிழையில் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நேற்று திருப்பதியில் இருந்து ஐதராபாத்துக்கு சென்ற இண்டிகோ நிறுவன விமானத்திதின் டயர்கள் தீ பற்றி எரிந்தது. இந்த விமானத்தில் நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ-வுமான ரோஜா உள்ளிட்ட 77 பேர் இருந்தார்கள். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் விமானம் ஓடு பாதையில் நின்றவுடன், விமானத்தின் கதவுகள் திறக்க முடியாமல் பழுதடைந்துவிட்டதால், பயணிகள் ரொம்பவே பதற்றம் அடைந்தவிட்டனர். 

 

இதனைத் தொடர்ந்து விமான ஊழியர்களின் அதிரடியான நடவடிக்கை மூலம் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

நேற்று இரவு 8.50 க்கு திருப்பதியில் இருந்து புறப்பட்ட விமானம் இரவு 10.30 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் தரை இரங்கும் போது இந்த தீ விபத்து ஏற்பட்டது.