கவர்ச்சி நடிகைக்கு வந்த பரிதாப நிலை!

’அம்புலி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சனம் ஷெட்டி. அப்படத்தை தொடர்ந்து ‘கதம் கதம்’, ‘சவாரி’, ’சதுரன் 2’ போன்ற படங்களில் நடித்திருக்கும் இவர் ஏராளமான விளம்பரப் படங்களிலும், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி போல ‘வில்லா டு வில்லேஜ்’ என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கிக்யுள்ளது. போட்டியாளர்களாக 12 பெண்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியும் ஒரு போட்டியாளர்.
இதில் என்ன கொடுமை என்றால், இந்த 12 போட்டியாளர்களும் கிராமம் ஒன்றில், 40 நாட்கள் கூலி வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு, எந்தவித வசதியும் இல்லாமல், அந்த கிராமத்து மக்களைப் போலவே அங்கு வாழ வேண்டுமாம். இறுதியில் அந்த கிராமத்து மக்கள் ஒட்டு போட்டு, அதே கிராமத்து பஞ்சாயத்து மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.
தற்போதும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று பல படங்களில் சனம் ஷெட்டி நடித்து வந்தாலும், இப்படிப்பட்ட கஷ்ட்டமான போட்டியில் அவர் பங்கேற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.