Feb 19, 2019 06:21 AM

நான் காதலிப்பது இந்த நடிகரை தான்! - மனம் திறந்த வரலட்சுமி

நான் காதலிப்பது இந்த நடிகரை தான்! - மனம் திறந்த வரலட்சுமி

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானாலும், தற்போது வில்லி உள்ளிட்ட வேடங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கான மார்க்கெட் அதிகரித்து வருகிறது.

 

இதற்கிடையே, வரலட்சுமியும், விஷாலும் காதலிப்பதாக கூறப்பட்டது. இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டார்கள். ஆனால், விஷால் சமீபத்தில் தனது திருமணம் பற்றி அறிவித்ததை தொடர்ந்து, வரலட்சுமி - விஷால் இடையிலான காதல் கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

 

இந்த நிலையில், வரலட்சுமி தனது காதல் பற்றியும், தான் யாரை காதலிக்கிறேன், என்பது பற்றியும் கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி, தனக்கு தெலுங்கு நடிகர் பிரபாஸ் மிது கிரஷ் இருப்பதாக கூறியுள்ளார்.

 

மேலும், தான் ஐ லவ் யூ சொல்வதென்றால் ‘பாகுபலி’ பிரபாஸிடம் தான் சொல்வேன், என்றும் அவர் தெரிவித்தார்.