Mar 20, 2018 05:19 AM
பேய் படத்தில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா தனுஷ்!

3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ள ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, சினிமா சண்டைக்கலைஞர்களை மையமாக வைத்து ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தை இயக்கினார். மேலும், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் வாழ்க்கையை படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இதற்கிடையே மாரியப்பனின் வாழ்க்கை படத்தை கிடப்பில் போட்டிருக்கும் ஐஸ்வர்யா தனுஷ், தற்போது பேய் படத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ளார்.
அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறாராம். லைட்டாக காமெடியை சேர்த்து தற்போதைய தமிழ் சினிமா டிரெண்டுக்கு ஏற்ற படமாக இப்படத்தை இயக்க முடிவு செய்திருக்கும் ஐஸ்வர்யா, தற்போது நடிகர் நடிகைகள் தேர்வில் ஈடுபட்டிருக்கிறாராம்.