Mar 31, 2018 04:10 PM

பிரபல இயக்குநருக்கு மனைவியான ஆண்ட்ரியா! - புகைப்படம் உள்ளே

பிரபல இயக்குநருக்கு மனைவியான ஆண்ட்ரியா! - புகைப்படம் உள்ளே

பாடகி மற்றும் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வரும் ஆண்ட்ரியாவின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘தரமணி’ ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் பாராட்டுப் பெற்றது. இருந்தாலும், அப்படத்திற்குப் பிறகு ஆண்ட்ரியாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.

 

இதனால் ரொம்பவே அப்செட்டான ஆண்ட்ரியா, சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போது, “ரஜினி, விஜய் போன்றவர்களுடன் சேர்ந்து நடித்தால் தான் நடிகையா?, அப்போது தான் பட வாய்ப்புகள் கிடக்குமா? என்று கேள்விகளை எழுப்பி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

 

இதற்கிடையே, வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘வட சென்னை’ படத்தில் ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏற்கனவே இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் நிலையில், ஆண்ட்ரியாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதால் தனுஷுக்கு ஜோடி யார், என்பதில் குழப்பம் ஏற்பட்டது. 

 

இந்த நிலையில், ‘வட சென்னை’ படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் குறித்து தகவல் கசிந்துள்ளது. ஆம், அவர் வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குநர் அமீருக்கு மனைவியாக நடிக்கிறாராம்.

 

Director Ameer

 

‘வட சென்னை’ படத்தில் வட சென்னை தாதாவாக நடிக்கும் அமீருக்கு ஆண்ட்ரியா தான் ஜோடியாம். மேலும், வட சென்னை மக்கள் போல தமிழ் பேசுவதற்கு ஆண்ட்ரியா பயிற்சி எடுத்து வருகிறாராம்.