Oct 27, 2020 05:24 AM

அனிதாவை மீண்டும் அழ வைத்த சுரேஷ் சக்கரவர்த்தி! - பிக் பாஸில் புதிய பிரச்சினை ஆரம்பம்

அனிதாவை மீண்டும் அழ வைத்த சுரேஷ் சக்கரவர்த்தி! - பிக் பாஸில் புதிய பிரச்சினை ஆரம்பம்

பிக் பாஸ் சீசன் 4-ல் அவ்வபோது சண்டைகள், பிரச்சினைகள் தலை தூக்கினாலும், நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யம் பெறவில்லை. கடந்த மூன்று சீசன்களின் நிகழ்ச்சி அளவுக்கு இந்த நான்காவது சீசன் பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இல்லை, என்பது ரசிகர்களின் கவலை. 

 

இதற்கிடையே, எந்த விஷயமாக இருந்தாலும், “கண்டெண்ட்” என்ற பெயரில் எல்லை மீறும் சுரேஷ் சக்கரவர்த்தி, தன்னை ஆன் வனிதாவாக பாவித்துக் கொண்டு சில அதிக பிரசிங்கி செயல்களில் ஈடுபட்டு வருகிறார். 

 

அந்த வகையில், நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொண்டாடப்பட்ட விஜயதஷமி நிகழ்வில், சுமங்கலியான அனிதாவை விளக்கு ஏற்றும்படி அவர் கூறினார். இதை நகரம் மற்றும் கிராமம் அனுபவத்தின் போது விவரித்த அனிதா, கிராமத்தில் இன்னும் இதுபோன்ற பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. ஆனால், நகரத்தில் இவை இல்லை, என்று சுட்டிக் காட்டினார்.

 

இப்படி பேசும் போது அனிதா மரணம், போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். நல்ல நிகழ்வின் போது அபசகுணமாக மரணம் போன்ற வார்த்தையை பேசியது தவறு என்று கூறிய சுரேஷ் சக்கரவர்த்தி, அதை பலரிடம் சொல்லி அனிதாவை மன்னிப்பு கேட்க வைத்தார். அவரது இத்தகைய செயலால், தான் அதிகம் பேசுகிறவள், என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறி அனிதா கதறி அழகிறார்.

 

அனிதா கதறி அழும் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் கன்ஷப்ஷன் அறையில் அவர் பிக் பாஸிடம் பேசும் போது, தனக்கு எப்போதும் ஒரு நெகட்டிவ் மைண்ட் இருந்துக் கொண்டே இருப்பதாகவும் கூறுகிறார்.