Mar 24, 2018 01:19 PM

தொடரும் சினிமா வேலை நிறுத்தம் - ஐடியா கொடுத்த அரவிந்த்சாமி!

தொடரும் சினிமா வேலை நிறுத்தம் - ஐடியா கொடுத்த அரவிந்த்சாமி!

டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் வசூலிக்கம் அதிகமான கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் வேலை நிருத்த போராட்டத்தை நடத்தி வருகிறது. 

 

முதலில் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற அடிப்படையில் போராட்டத்தை தொடங்கிய தயாரிப்பாளர்கள் சங்கம், தற்போது படப்பிடிப்புகள் ரத்து மற்றும் பின்னணி வேலைகளுக்கு தடை என்று போராட்டத்தை அதிகரித்துள்ளது. இதன் மூலம் பல்லாயிரம் கணக்கான சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

 

தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இந்த போராட்டத்திற்கு சினிமா தொழிலாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் மற்றும் இயக்குநர்கள் சங்கம் என அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதே சயமம், மூத்த நடிகரான ரஜினிகாந்த், தான் என்றுமே வேலை நிறுத்தத்தை ஆதரிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.

 

இந்த நிலையில், நடிகர் அரவிந்த்சாமி, இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதற்காக யோசனை ஒன்றை சமூக வலைதளம் மூலம் கூறியிருப்பவர், என்னை பொறுத்தவரை மாஸ்டரிங் அல்லது விபிஎப் செய்வதற்கான கட்டணத்தை தயாரிப்பாளரே ஏற்றுக் கொண்டால் தான் கண்டெண்ட் சிதையாமல் இருக்கும். அதேபோல் அந்த கண்டெண்டால் வரும் விளம்பரத்திற்கான லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டும். எந்த விளம்பரம் எவ்வளவு கட்டணம் என்பதை எல்லாம் முடிவு செய்யலாம். வேண்டுமானால் லாபத்தில் விநியோகஸ்தர்களுக்கு பங்கு தரலாம். இப்படி செய்தால் முதலீடு செய்பவருக்கு லாபம் சரியாகப் போய்ச் சேரும். தொழிநுட்பத்தை செயல்படுத்துபவருக்கு அல்ல, என்று தெரிவித்துள்ளார்.

 

அரவிந்த்சாமியின் இந்த ஐடியா குறித்து சிலர் அவருடன் ட்விட்டர் விவாதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.