Nov 11, 2019 07:48 AM

அதர்வா தம்பிக்கு கல்யாணம்! - பெண் விஜய் குடும்பத்தை சேர்ந்தவர்

அதர்வா தம்பிக்கு கல்யாணம்! - பெண் விஜய் குடும்பத்தை சேர்ந்தவர்

’தளபதி 64’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அதே நிலையில், விஜய் குடும்பத்தில் திருமண ஏற்பாடும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

 

தளபதி 64 படத்தை தயாரித்து வரும் விஜயின் உறவினரான சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகா பிரிட்டோவுக்கும், நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் தான் திருமணம் நடைபெற இருக்கிறது. இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்த போது காதலில் விழுந்துவிட்டார்களாம்.

 

வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு ஓகே சொல்வதில் சினேகா பிரிட்டோவின் குடும்பம் தயக்கம் காட்டி வந்த நிலையில், தற்போது ஓகே சொல்லிவிட்டார்களாம்.

 

எனவே, ஆகாஷுக்கும், சினேகா பிரிட்டோவுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறதாம். மேலும், தனது வருங்கால கணவருக்காக சினேகா பிரிட்டோ ரூ.1 கோடி மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறாராம்.

 

Sneha Britto and Vijay

 

‘சட்டம் ஒரு இருட்டறை 2’ படத்தை இயக்கிய சினேகா பிரிட்டோ அதன் பிறகு சினிமா பக்கமே அவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.