Mar 30, 2018 05:50 AM

மூன்று கெட்டப்புகளில் நடிக்கும் அதர்வா!

மூன்று கெட்டப்புகளில் நடிக்கும் அதர்வா!

கண்ணன் இயக்கத்தில் ’பூமராங்’ என்ற படத்தில் நடிக்கும் அதர்வா, அப்படத்தில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார். பரதேசி படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்துக் காட்டியவர், இப்படத்தின் மூலம் கதாபாத்திரத்திற்கு ஏற்ற கெட்டப்புகளுக்கு தன்னால் மாற முடியும் என்பதை நிரூபித்து காட்ட இருக்கிறார்.

 

ஆம், ‘பூமராங்’ படத்தில் அதர்வா மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்க உள்ளார். இதற்காக அவர், பல மணி நேரம் கஷ்ட்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொள்கிறார்.

 

இது குறித்து இயக்குநர் கண்ணன் கூறுகையில், “இந்த கதையும், அதர்வாவின் கதாபாத்திரமும் உருவான போது அதற்கு மூன்று வெவ்வேறு தோற்றங்கள் தேவைப்பட்டது. எனவே விருது பெற்ற மேக்கப் துறையில் வல்லுநர்களான கலைஞர்கள் ப்ரீத்திஷீல் சிங், மார்ட்க் ட்ராய் டிஷோசா ஆகியோரை அணுகினோம். படத்திற்கு தேவையான தோற்றங்களை இறுதி செய்ய மும்பைக்கு சென்றோம். அதர்வாவின் கடுமையான ஷூட்டிங்கினால் அவர்களை இங்கு வரவைக்க வேண்டி இருந்தது. சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி 12 மணி நேரம் உழைத்து எங்களுக்கு தேவையான தோற்றத்தை உருவாக்கி கொடுத்தார்கள். அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட சின்ன சின்ன அளவுகளை தனித்துவமனா முறையில் அளவெடுத்து சென்றனர். ஒரு வகையான மாவை அதர்வாவின் மீது பூசி விடுவார்கள். அதர்வா ஐந்து மணி நேரம் சிலை போல அசையாமல் இருப்பார். அந்த நிலையில் மூச்சு விடுவது மிகவும் சிரமமான விஷயம், மூச்சு விடுவதற்கு ஒரு சிறு குழாய் அவர் மூக்கில் பொருத்தப்பட்டது.

 

அதை தொடர்ந்து ப்ரோஸ்தடிக் கேஸ்ட் செய்ய 30 நாட்கள் தேவைப்பட்டது. அதன் பிறகு தான் தொடர் படப்பிடிப்புக்கு செல்ல முடியும். அதர்வா இந்த செயல்களின் நடுவே சில நேரங்களில் ”என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இந்த மாதிரி விஷயங்களை முதன் முறையாக செய்வதால் மகிழ்ச்சி அடகிறேன் என கூறினார்”, என்றார்.” என்று தெரிவித்தார்.

 

பத்மாவத், நவாசுதீஷ் சித்திக் நடித்த மாம், அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் தங்களது சிறப்பான ப்ரோஸ்தடிக் மேக்கப்பால் ப்ரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா புகழ்ப்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.