Mar 27, 2018 03:34 PM

பாலிவுட்டுக்கு போகும் பிக் பாஸ் ரைசா படம்!

பாலிவுட்டுக்கு போகும் பிக் பாஸ் ரைசா படம்!

மூன்றாம் தர மாடலான ரைசா தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் துணை நடிகையாக நடித்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி அவரை கோடம்பாக்க ஹீரோயின்களின் பட்டியலில் இடம்பெற செய்துவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானதோடு, சினிமாவின் ஹீரோயின் அந்தஸ்தையும் பெற்றுவிட்ட ரைசா, ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார்.

 

அறிமுக இயக்குநர் இலன் இயக்கும் இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் ராஜ ராஜனுடன் இணைந்து தயாரிக்கிறார்.

 

இப்படத்தின் தலைப்பு, பஸ் லுக் போஸ்டர் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஏற்கனவே வெளியான ”ஹை ஆன் லவ்..” என்று துவங்கும் இப்படத்தின் பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் ஆகியுள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் மாற்று மொழி உரிமையை வாங்க பெரும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் இந்தி உரிமைக்காக தயாராகி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

தற்போது இறுதிக்கட்டத்தை படம் எட்டியிருப்பதால், இந்தி ஆக்கம் பற்றிய விவரங்களை தெரிவிக்க இன்னம் அவகாசம் தேவை, என்று இப்படத்தின் இயக்குநர் இலன் கூறியிருக்கிறார்.