Dec 02, 2020 11:09 AM

காமெடி நடிகர் பெஞ்சமி இயக்கியிருக்கும் ‘உசுரு’ - ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

காமெடி நடிகர் பெஞ்சமி இயக்கியிருக்கும் ‘உசுரு’ - ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக அவதாரம் எடுப்பது கோலிவுட் அதிகரித்து வருவது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் காமெடி நடிகர்கள் இயக்குநர் அவதாரம் எடுப்பதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், விஜயின் ‘திருப்பாச்சி’ படத்தில் தனது இயல்பான காமெடி நடிப்பால் அனைவரையும் கவர்ந்த பெஞ்சமினும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

 

உதவி இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய பெஞ்சமின், தனக்கு கிடைத்த நடிகர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி காமெடி நடிகராக பிரபலமானாலும், படம் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வந்தார். அதன் முதல்படியாக மக்களை விபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

 

சேலம் மாநகர காவல்துறையினர் வழங்கிய இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டவர், ‘உசுரு’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். சாலை விதிகளை கடைப்பிடிக்காத, தலைக்கவசம் அணியாத, குடித்துவிட்டு வண்டியை ஓட்டும் ஒரு பெறுப்பற்ற நபரின் கதையாக உருவாகியுள்ள இந்த குறும்படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கும் பெஞ்சமின், இதில் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். இவருடன் காமெடி நடிகர்களின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் டாக்டர்.கிங்காங், முகமது காசிம், ஹரி, இளங்கோ உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் சேலம் மாநகர காவல்துறையினரும் நடித்துள்ளனர்.

 

Usuru First Look

 

’உசுரு’ குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் என்.பாலசுப்பிரமணியன் அவர்கள்  இன்று வெளியிட்டார்.

 

சேலம் ஜம்ஜம் ஹெல்மெட் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இக்குறும்படத்திற்கு சேலம் சிவரஞ்சனி எஸ்.டேவின் இசையமைத்துள்ளார். டப்பிங் மற்றும் எபெக்ட்ஸ் பணிகளை பிடி ஸ்டுடியோவின் பிரேம் கவனித்துள்ளார். கந்தையா எடிட்டிங் செய்ய, வினோத் சிஐ, தமிழ் பையன் கார்த்திக் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். எம்.ஜெயச்சந்திரன், இரா.பன்னீர்செல்வம் ஆகியோர் உதவி இயக்குநர்களாக பணியாற்ற, கோவிந்தராஜ் பி.ஆரோ-வாக பணியாற்றியுள்ளார்.