தெய்வமகள் காயத்ரியை அழ வைத்த நடிகர்!

தமிழ் மக்களிடம் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘தெய்வமகள்’ சீரியலில் கொடூர வில்லி வேடத்தில் நடித்தார் காயத்ரி. சீரியலில் ஹீரோயின் சத்யாவுக்கு நிகரான வலுவான கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது முன்னணி சீரியல் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ரேகா கிருஷ்ணப்பா என்பது தான் காயத்ரியின் உண்மையான பெயர். தெய்வமகள் சீரியலை தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் சீரியல்களில் நடித்து வரும் இவர், சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ரேகா கிருஷ்ணப்பா தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரால் அடிக்கடி அழ வைக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சீரியலில் ரொம்ப போல்டான பெண் வேடத்தில் நடித்தாலும் ரேகா, ரொம்பவே சென்சிட்டிவ் ஆனவராம்.
தெய்வமகள் சீரியலில் ரேகாவின் கணவராக குமார் வேடத்தில் நடித்த பிரகாஷ் அதிகம் கிண்டல் செய்வாராம். இதனால் சில நேரங்களில் ரேக கதறி அழுதுவிடுவாராம். அதேபோல், அவரது வீடியோவுக்கு கதாபாத்திரத்தை தாண்டி சிலர் தனிப்பட்ட முறையில் கொடுக்கும் கமெண்டுக்கு பதில் அளிக்க முயற்சி செய்து பிறகு செய்யாமல் விட்டுவிடுவாராம்.
இப்படி ரொம்ப பயந்தா சுபாவம் கொண்ட ரேகா கிருஷ்ணப்பா, சீரியல்களில் புலியாக நடித்தாலும் உண்மையில் எலியாம்.