Feb 15, 2018 07:56 AM

ராசியான ஹாரிஸ் ஜெயராஜ் மூலம் குஷியான இயக்குநர் மு.களஞ்சியம்!

ராசியான ஹாரிஸ் ஜெயராஜ் மூலம் குஷியான இயக்குநர் மு.களஞ்சியம்!

’பூமணி’, ‘கிழக்கும் மேற்கும்’, ‘பூந்தோட்டம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள மு.களஞ்சியம் இயக்கத்தில் உருவாகும் படம் ‘முந்திரிக்காடு’. ஆணவக் கொலையை பற்றிய பதிவாக உருவாகும் இப்படத்தில் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

 

இப்படத்தில் ஹீரோவாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரனின் மகன். ஹீரோயினாக சுபபிரியா நடிக்க, இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

சி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.கே.பிரியன் இசையமைக்கிறார். 17 வயதுடைய இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவிபாஸ்கர் பாடல்கள் எழுத, எல்.வி.கே.தாஸ் எடிட்டிங் செய்கிறார். மயில் கிருஷ்ணன் கலையை நிர்மாணிக்க, லீ முருகன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

டி.ஜி.ராமகிருஷ்ணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, மு.களஞ்சியம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தை தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

 

இப்படத்தின் பஸ் லுக் போஸ்டரை சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டதோடு, படத்தின் ஒவ்வொரு கலைஞர்களையும் வாழ்த்தி பேசினார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்ததோடு, பலர் களஞ்சியத்திற்கு வாழ்த்தும் கூறி வருவதால் அவர் ரொம்பவே குஷியடைந்துள்ளார்.

 

ஆணவக் கொலை பற்றிய பதிவாக படம் இருக்கும் என்பதை பஸ் லுக் போஸ்டர் டிசைனிலும் தெரிந்ததால், ரசிகர்களிடம் இப்படம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த இயக்குநர் மு.களஞ்சியம் திட்டமிட்டுள்ளார்.