Mar 24, 2018 05:13 AM

இந்திய திரையுலகின் மைல் கல்லாக உருவாகும் நாய் படம்!

இந்திய திரையுலகின் மைல் கல்லாக உருவாகும் நாய் படம்!

தமிழ் சினிமா மட்டும் அல்ல உலக சினிமா வரலாற்றில் நடிகர் நடிகைகள் நடிக்கும் படங்களைக் காட்டிலும் விலங்குகள் நடிக்கும் படங்கள் அனைத்துமே மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் கூட ஹீரோக்களுக்கு இணையாக விலங்குகள் நடித்திருக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த வகையில், தமிழ் சின்மாவில் நாயை மையப்படுத்திய அட்வென்சர் படம் ஒன்று உருவாக உள்ளது. 2015 ஆம் ஆண்டு கன மழையால் பெரு வெள்ளத்தில் சென்னை பாதிக்கப்பட்டிருந்த போது வெளியான ‘உறுமீன்’ படத்தை இயக்கிய சக்திவேல் பெருமாள்சாமி தான் இந்த நாய் அட்வென்சர் படத்தை எழுதி இயக்குகிறார்.

 

ஒரு நாய்க்கும், மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும், ஒருவருக்கொருவர் உதவி கொள்ளும் விதத்தையும் மையமாக வைத்து உருவாக உள்ள இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

குழந்தைகளோடு பெரியவர்களையும் கவரும் விதத்தில் அட்வென்சர் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகும் இப்படத்தை  காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடெட் பிலிம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.