Apr 02, 2018 06:20 AM

குடிபோதையில் பிரபல நடிகையை அடித்த பிரபல நடிகர்!

குடிபோதையில் பிரபல நடிகையை அடித்த பிரபல நடிகர்!

சினிமா மற்றும் நடிகர், நடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் ஒரு சிலர் சர்ச்சையானவர்கள் என்றே பெயர் எடுத்து வைத்திருக்கிறார். அந்த வரிசையில் போஜ்பூரி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் பவண் சிங்கும் ஒருவர். 

 

அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கிவிடும் நடிகர் பவண் சிங், தற்போது நடிகை விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 

படப்பிடிப்புக்காக சில்வாசா என்ற பகுதிக்கு நடிகர் பவண் சிங் சென்றுள்ளார். அவருடன் நடிகை அக்‌ஷரா சிங்கும் சென்றுள்ளார். இவர்கள் தாமன் கங்கா வேலேயே ரிசார்டில் தங்கிய நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு 11.30 மணிக்கு பவண் சிங், மது போதையோடு ரூமை விட்டு வெளியே கிளம்பியுள்ளார். அப்போது அவரை அக்‌ஷரா சிங் தடுத்து நடித்த முயற்சி செய்த போது, அவரது முடியை பிடித்து இழுத்த பவண் சிங், அக்‌ஷரா சிங்கின் தலையை சுவற்றில் இடித்ததோடு, அவரை கடுமையாக அடிக்கவும் செய்துள்ளார்.

 

மேலும், அவர் நடிகையை கடுமையாக தாக்கும் போது அதை ரிசார்ட் பணியாளர்கள் தடுக்க முயன்ற போது அவர்களுடம் பவண் சிங் கைகளப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நிருபர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளார்.

 

பவண் சிங் மற்றும் அக்‌ஷரா சிங் இருவரும் நெருக்கமாக பழகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் போஜ்பூரி சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.