Mar 16, 2019 06:38 AM

ஆர்யா திருமணம்! - நெருக்கமாக இருந்த பெண்ணின் உருக்கமான பதிவு

ஆர்யா திருமணம்! - நெருக்கமாக இருந்த பெண்ணின் உருக்கமான பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா, நடிகை சாயீஷாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 

 

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தியான சாயீஷா ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ’ஜுங்கா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ஆகிய படங்களில் நடித்தவர் கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது ஆர்யாவுடன் காதல் வயப்பட்டு அவரை கரம் பிடித்திருக்கிறார்.

 

கடந்த 10 ஆம் தேதி ஆர்யா - சாயீஷா திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் கலந்துக் கொண்டனர்.

 

இந்த நிலையில், ஆர்யாவின் திருமணம் குறித்து அவருடன் நெருக்கமாக பழகி வரும் பெண் ஒருவர் உருக்கமாக பேசியிருக்கிறார்.

 

அதாவது, எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக ஆர்யாவுடன் பல பெண்கள் கலந்துக் கொண்டார்கள். அதில் பங்கேற்ற அபர்ணதி என்பவர் தற்போது ஹீரோயினாக படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும், சில பெண்கள் மாடலிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

அதில் ஒருவரான சீதாலட்சுமி என்பவர் ஆர்யா திருமணம் பற்றி உருக்கமாக பேசி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

Seethalakshmi

 

இது குறித்து கூறிய சீதாலட்சுமி, ”ஆர்யாவுக்கு சாயீஷாவுடன் திருமணம் என்று சமூக வலைத்தளங்களில் பார்த்து தான் தெரிந்து கொண்டோம். அவர் எங்களுக்கு மட்டுமாவது நேரடியாக சொல்லியியிருக்கலாம். அவருடன் பெர்சனாலாகவும், புரொபஷ்னலாகவும் நெருக்கமாகத்தான் இருக்கிறோம். அவர் எங்களுக்கு கூட சொல்லாமல் போனது வருத்தம் அளித்தது.” என்று தெரிவித்துள்ளார்.