Mar 16, 2019 06:23 AM

விபத்தில் சிக்கிய பிரபல தொலைக்காட்சி நடிகர்!

விபத்தில் சிக்கிய பிரபல தொலைக்காட்சி நடிகர்!

சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி பிரபலமானவர் முரளி. ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் முரளி, தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிறம் மாறாத பூக்கல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

 

தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வரும் முரளி, தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதோடு, சீரியல்களிலும் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கிறார்.

 

இந்த நிலையில், நடிகர் முரளி சமீபத்தில் பெரிய விபத்து ஒன்றில் சிக்கி அதிஷ்ட்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இருப்பினும், அவருக்கு விபத்தில் உடலின் சில பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

 

இது குறித்து, குறித்த தகவலை முரளி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதோடு, பெரிய விபத்தில் சிக்க இருந்து அதிஷ்ட்டவஷமாக உயிர் தப்பித்ததாக தெரிவித்திருக்கிறார்.

 

View this post on Instagram