Feb 19, 2018 08:49 AM

பிரபல நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் குண்டு ஹனுமன்ந்த் ராவ், இன்று (பிப்.19) உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 61.

 

பல தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்திருப்பவர் குண்டு ஹனுமன்ந்த் ராவ். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் கடந்த பல மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

 

இந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது