Mar 21, 2018 05:56 AM

பங்கி ஜம்பிங் செய்த போது விபத்து - ஆபத்தான நிலையில் பிரபல நடிகை!

பங்கி ஜம்பிங் செய்த போது விபத்து - ஆபத்தான நிலையில் பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகையான நடாஷா சூரி, பங்கி ஜம்பிங் செய்தபோது விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சமீபத்தில் கடை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியா சென்ற நடிகை நடாஷா சூரி, நிகழ்ச்சி முடிந்த பிறகு பங்கி ஜம்பிங் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். அதன் படி அவர் பங்கி ஜம்பிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, எதிர்ப்பாரத வகையில், அவரது கயிறு பாதியிலேயே அறுந்து விழுந்துள்ளது.

 

பங்கி ஜம்பிங் செய்யும் இடம் ஆற்றை ஒட்டிய இடம் என்பதால், நடாஷா சூரி தலைகிழாக ஆற்றின் உள்ளே விழுந்துள்ளார். உடன்வே அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வரும் நடாஷாவின் உடல்நிலை மிகவும் மோசமக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.