Mar 26, 2018 05:39 AM

விஜய் ரசிகர்கள் மீது போலீசில் புகார் அளிக்கும் பிரபல நடிகர்!

விஜய் ரசிகர்கள் மீது போலீசில் புகார் அளிக்கும் பிரபல நடிகர்!

கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய் ரசிகர்கள் காமெடி நடிகர் கருணாகரனை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள். இதற்கு காரணம், வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் படத்தின் படப்பிடிப்பு நடைபெற, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாகரன் கருத்து தெரிவித்திருந்தது தான்.

 

மேலும், ‘மெர்சல்’ பாடல் வரியை ட்விட்டரில் பதிவிட்டு விஜயை குற்றம் சாட்டினார். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் கருணாகரன் மீது கடுப்பாகி ட்விட்டரிலேயே அவரை தாக்க ஆரம்பித்துவிட்டார்கள். தொடர்ந்து வார்த்தைகளால் கருணாகரனை விஜய் ரசிகர்கள் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அவர்களது தொல்லை எல்லை மீறியதால், அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க கருணாகரன் தயாராகிவிட்டார்.

 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருணாகரன், “நடிகர்களின் படத்தை ப்ரொபைல் படமாக வைத்துக் கொண்டு தொடர்ந்து அவதூறாக பேசி வருவதை இதுவரை பொறுத்துக் கொண்டேன். இனி முடியாது. விரைவில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்க உள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

கருணாகரனின் இத்தகைய நடவடிக்கையால் கோடம்பாக்கத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.