Mar 01, 2018 06:36 PM

‘கல்கி’ குறும்படத்தை வாங்கிய டிஜிட்டல் நிறுவனம்!

‘கல்கி’ குறும்படத்தை வாங்கிய டிஜிட்டல் நிறுவனம்!

சிறப்பாக  எடுக்கப்படும் உணர்வுபூர்வமான குறும்படங்கள் மக்கள் மனதில் என்றுமே தனக்கென ஒரு இடம் பிடிக்கும். திலிப் குமார் இயக்கத்தில் கிஷோர், யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடிப்பில் உருவாகிய 45 நிமிட குறும்படம் 'கல்கி' உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. 

 

இது ஒரு இயற்பியலாளருக்கும், தனது வயதில் பாதி வயதே இருக்கும் தனது காதலிக்கும் இடையே  நடக்கும் உணர்வுப்பூர்வமான குறும்படம் தான் 'கல்கி'. இந்த குறும்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் உலகமெங்கும் கிடைத்துவருகிறது. 

 

தற்பொழுது இந்த குறும்படத்தை டிஜிட்டல் உலகின் முன்னோடி 'Netflix' நிறுவனம் வாங்கியுள்ளது. இது இந்த குறும்படத்தின் பலத்தையும்  மதிப்பையும் மேலும் பல மடங்கு கூட்டியுள்ளது. 'கல்கி' யின் வெற்றி அதன் இயக்குனர் திலிப் குமாருக்கு ஒரு பட வாய்ப்பை பெற்று தந்துள்ளது. இந்த செய்தி மேலும் பலரை குறும்படங்கள் மூலம் வெற்றி பெற ஊக்கப்படுத்தும் என நம்பப்படுகிறது. 'கல்கி' குறும்படத்தை 'பிரமோத் பிலிம்ஸ்' சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்துள்ளனர்.