Feb 19, 2019 06:34 AM

தமன்னாவுக்கு அல்வா கொடுத்த இயக்குநர்!

தமன்னாவுக்கு அல்வா கொடுத்த இயக்குநர்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் ஹீரோவுக்கு நிகரான வேடத்தில் நடித்திருக்கும் தமன்னாவின் நடிப்பு பெரிதும் பாராட்டும்படி இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

வரும் 22 ஆம் தேதி படம் வெளியாவதால், தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கும் தமன்னா, ‘கண்ணே கலைமானே’ படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

 

அதன்படி, சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தமன்னாவிடம், உங்களது நடிப்புக்கு கிடைத்த பாராட்டு பற்றி சொல்லுங்க, என்றதற்கு, ஒரு காட்சியில், எனது நடிப்பை பாராட்டிய இயக்குநர் சீனு ராமசாமி சார், அல்வா கொடுத்தார். அது திருநெல்வேலி அல்வா, ரொம்ப நன்றாக இருந்தது.

 

அல்வா கொடுத்தார், என்றதும் தவறாக நினைக்க வேண்டாம். ஒரு நல்ல விஷயம் நடந்தால் இனிப்பை பரிசாக கொடுப்பார்கள் அல்லவா, அப்படி தான் அவர் எனக்கு அல்வா கொடுத்தார். அது தான், என் நடிப்புக்கு கிடைத்த சிறந்த பாராட்டு, என்றவர் சீனு ராமசாமி படத்தில் ஆண்டுக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும், என்ற ஆசை இருப்பதாகவும் தெரிவித்தார்.