Apr 06, 2018 11:37 AM
‘ஜோக்கர்’ பட நடிகைக்கு திடீர் திருமணம்!

கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றதோடு, அப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரது கவனத்தை ஈர்த்தனர். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் காயத்ரி.
விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்திலும் நடித்துள்ள காயத்ரி, பல மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை காயத்ரிக்கு திடீரென்று திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் ஜீவன்ராஜுக்கும், காயத்ரிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. கடந்த 2 ஆம் தேதி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.