Mar 09, 2018 04:59 AM

பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களை எச்சரிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’!

பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களை எச்சரிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’!

’ஜித்தன் 2’, ‘1 AM' ஆகிய படங்களை தயாரித்த ஆர்.பி.எம் சினிமாஸ் நிறுவனம் ‘களத்தூர் கிராமம்’, ‘143’ ஆகிய படங்களை வெளியிட்டும் இருக்கிறது. இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் பஸ்ட் லுக் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது.

 

பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களை எச்சரிக்கும் விதமாக உருவாகி வரும் இப்படத்தில் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

 

கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை சொற்கோ எழுதுகிறார். மனோகர் ஒளிப்பதிவு செய்ய, மனோ கலையை நிர்மாணிக்கிறார். எஸ்.எல்.பாலாஜி நடனம் அமைக்க, ஆக்‌ஷன் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். டி.பி.வெங்கடேசன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ராஜசேகர் எழுதியிருக்கிறார். இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான ‘யா யா’ படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளியாக உள்ள ‘பாடம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். 

 

இப்படத்தை ராகுல் இயக்கியிருக்கிறார். இணை தயாரிப்பை ஜே.எஸ்.கே.கோபி கவனித்துள்ளார்.