Apr 06, 2018 07:10 AM

ஜெயம் ரவியை கைவிட்ட முன்னணி தயாரிப்பு நிறுவனம்!

ஜெயம் ரவியை கைவிட்ட முன்னணி தயாரிப்பு நிறுவனம்!

ஜெயம் ரவி நடிப்பில், சக்தி செளந்தர ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டிக் டிக் டிக்’. இந்திய சினிமா வரலாற்றில் முதல் விண்வெளிப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

 

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில், இப்படத்தை 

ரிலீஸ் செய்வதாக கூறி ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியது. படத்தை இம்மாதம் வெளியிடவும் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தில் இருந்து விலகியுள்ளது. இதன் விளைவாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. 

 

ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் வாங்கி வெளியிடும் பல படங்கள் தொடர்ந்து தோல்விப்படங்களாக அமைந்ததால், ‘டிக் டிக் டிக்’ படத்தை வெளியிடுவதில் இருந்து அந்நிறுவனம் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், அந்நிறுவனம் வெளியிட இருந்த அதர்வாவின் ‘செம போதை ஆகாதே’ படத்தில் இருந்தும் விலகிவிட்டதாம்.