Feb 15, 2018 06:13 AM

ஓவியா - சிம்பு கூட்டணி படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸ்!

ஓவியா - சிம்பு கூட்டணி படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஓவியாவுக்கு பல படங்களின் வாய்ப்பு வந்தாலும், அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கும் சக்தி ஒரு சில தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே இருப்பதால், ஓவியாவும் தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

 

அந்த வரிசையில் லாரன்ஸின் ’காஞ்சனா 3’ படத்திற்குப் பிறகு ‘களவாணி 2’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ள ஓவியா, அடுத்ததாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் ஓவியாவுடன் சிம்பும் இணைந்துள்ளார். ஆனால், நடிகராக அல்லாமல் இசையமைப்பாளராக சிம்பு இப்படத்தில் இணைந்துள்ளார்.

 

சந்தானம் ஹீரோவாக நடித்த ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்கு இசையமைத்த சிம்பு, அடுத்ததாக ஓவியாவின் படத்திற்கு இசையமைக்கிறார். 

 

’90 ml' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியான ஒரு சில நிமிடங்களில் இந்த பஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

‘குளிர் 100’ படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கும் இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். விஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.