Mar 21, 2018 04:26 PM

படுக்கையை பகிர்ந்துகொள்ளும் நடிகைகள் - பட்டியலை வெளியிடும் தயாரிப்பாளரின் மனைவி

படுக்கையை பகிர்ந்துகொள்ளும் நடிகைகள் - பட்டியலை வெளியிடும் தயாரிப்பாளரின் மனைவி

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுகைக்கு தயாரிப்பாளர்கள் அழைப்பதாக சில நடிகைகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், நடிகைகள் விபச்சாரிகளை விட மோசமான நிலையை பட வாய்ப்புக்காக கையாள்வதாக தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கே.இ.ஞானவேல்ராஜாவின் மனைவி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா டிவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், ”சில நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துக் கொள்ளவும் தயாராக உள்ளனர். திருமணமான ஆண்கள் தான் அவர்கள் குறி. அதனால் பல குடும்பம் உடைகிறது. அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். அவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட்டு சினிமா துறையில் இருந்து வெளியேற்றுவேன்.” என்று வெளியிட்டிருந்தவர், சிறிது நேரம் கழித்து அந்த பதிவை நீக்கிவிட்டார்.

 

இந்த விவகாரம் கோடம்பாக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதன் எதிரொலியாக, இது குறித்து விளக்கம் அளித்த நேஹா, எனக்கும் என் கணவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எவ்வளவு சென்சிடிவ்வான ஒரு விஷயத்தை நான் பொதுழுபோக்காக செய்யவில்லை, என தெரிவித்துள்ளார்.