ரஜினி கன்னடத்துக்காரர் - கமல்ஹாசனின் கருத்தால் பரபரப்பு!

சினிமாவின் உச்ச நடிகர்களாக உள்ள கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் தற்போது தமிழக அரசியலில் எதிர் எதிர் அணியாக இருக்கிறார்கள். இருந்தாலும், சினிமா மற்றும் அரசியல் இரண்டையும் கடந்து நல்ல நண்பர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்தை கமல்ஹாசன் கட்டத்துக்காரர் என்று குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துனை வேந்தராக பொறுப்பேற்றுக் கொண்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா, நியமனம் குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், ”கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?” என்று டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதன் பிறகு, உடனடியாக ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது அடுத்தப் பதிவை வெளியிட்டவர் அதில், ”ஒரு நகைச்சுவைக்காக (முந்தைய டுவிட்டில்) அப்படிக் குறிப்பிட்டேன். உண்மையில் கர்நாடகத்தைச் சேர்ந்த நாகேஷ் என் குருநாதர்களில் ஒருவர், என் நண்பர்கள் ராஜ்குமார் அண்ணா, சரோஜாதேவி, ரஜினிகாந்த் மற்றும் திரு அம்பரீஷ் போன்றவர்கள் என் சொந்தங்கள். மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கை குறித்த என் நகைச்சுவை அது. துணைவேந்தர் மீதான சாடல் கிடையாது. எப்படியிருந்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் தேவை," என்று தெரிவித்திருந்தார்.
இதுநாள் வரை ரஜினிகாந்தை கன்னடக்காரர் என்று குறிப்பிடாத கமல்ஹாசன், முதல் முறையாக அவரை கன்னடக்காரர் என்று குறிப்பிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமலின் இத்தகைய கருத்துக்கு ரஜினிகாந்த், பதிலடி கொடுப்பாரா? அல்லது அமைதியாக இருப்பாரா? என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்.