Feb 15, 2018 08:05 AM

மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் - ரஜினிகாந்த் முடிவு

மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் - ரஜினிகாந்த் முடிவு

அரசியலில் அடுத்த கட்டத்திற்கு எடியெடுத்து வைத்திருக்கும் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, அதற்கான நிர்வாகிகளை மாவட்டம் வாரியாக தேர்வு செய்து வருகிறார்.

 

இந்த நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகரான தமிழருவி மணியன் இன்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த மாதம் இறுதிக்குள் அல்லது மார்ச் மாதம் ஆரம்பத்தில் தனது சுற்றுப் பயணத்தை ரஜினிகாந்த் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முன்பாக, தனது மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் நியமிக்கும் பணியை விரைந்து முடித்திடவும் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளாராம்.