Mar 30, 2018 12:38 PM

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடி இவர் தானாம்!

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடி இவர் தானாம்!

‘2.0’ மற்றும் ‘காலா’ என்று ரஜினிகாந்த் நடிப்பில் இரண்டு படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அவரது அடுத்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். அரசியல் பின்னணியைக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் 45 நாட்கள் தேதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க கார்த்திக் சுப்புராஜ் முயற்சித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அஞ்சலி மற்றும் திரிஷாவும் ஹீரோயின் பரிசீலனையில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது. இருந்தாலும், ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

 

இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் - ரஜினி கூட்டணி படத்தில் நயந்தாராவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாகியுள்ள நயந்தாரா, கமலுடன் ‘இந்தியன் 2’ விலும் நடிக்கிறார். தற்போது ரஜினிக்கும் அவர் ஜோடியாகியிருப்பதன் மூலம் ஒட்டு மொத்த ஹீரோயின்களின் கண்களும் நயந்தாரா மீது தான் இருக்கிறதாம்.

 

Nayanathara

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதே சமயம் மறுபக்கம் அவர் வில்லன் அல்ல தம்பியாக நடிக்க இருக்கிறார், என்றும் கூறப்படுகிறது. ஆனால், அனிருத், சன் பிக்சர்ஸ் இந்த இரண்டை தவிர கார்த்திக் சுப்புராஜ் - ரஜினிகாந்த் கூட்டணி படம் குறித்து வேறு எந்த விபரமும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.