Mar 21, 2018 04:46 PM

வருத்தத்தில் சமந்தா - காரணம் இந்த நடிகை தானாம்!

வருத்தத்தில் சமந்தா - காரணம் இந்த நடிகை தானாம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த போதே காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகை சமந்தா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன், என்று கூறியதோடு, அதற்கு தனது கணவர் வீட்டாரிடம் சம்மதமும் வாங்கினார்.

 

இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் போதிய அளவு வரவில்லையாம். இதனால், தான் எதிர்ப்பார்த்தது நடக்கவில்லையே என்ற வருத்தத்தில் சமந்தா இருக்கிறாராம்.

 

அதே சமயம், அவருக்கு வரும் பட வாய்ப்புகளை இனிப்பு கடையின் பெயர் கொண்ட நடிகை ஒருவர் தட்டி பறித்துவிடுகிறாராம். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சமந்தா, அந்த இனிப்பு கடை நடிகைக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறி வருவதோடு, அதற்கான பிளானும் போடுவதாக கூறப்படுகிறது.