Mar 01, 2018 06:43 PM

’தில்லுக்கு துட்டு’ இரண்டாம் பாகத்தை தொடங்கிய சந்தானம்!

’தில்லுக்கு துட்டு’ இரண்டாம் பாகத்தை தொடங்கிய சந்தானம்!

சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ மிகப்பெரிய தோல்வியை தழுவிய நிலையில், அவர் ஹீரோவாக நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள மூன்று படங்கள் வெளியாக முடியாமல் தவித்து வருகிறது. இதனால் சந்தானம் என்ற ஒரு நடிகரையே ரசிகர்கள் மறந்துபோகும் நிலை உருவாகியுள்ளது.

 

இதை இப்படியே விட்டுவிட்டால், ரோட்டில் நடந்து சென்றால் கூட தன்னை யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள், என்று நினைத்த சந்தானம், எப்படியாவது தனது படத்தை ரிலீஸ் செய்திட வேண்டும், என்று அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், தனது நடிப்பில் வெற்றி பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தொடங்கிவிட்டார்.

 

சந்தானத்தின் சொந்த நிறுவனமான ஹண்ட் மேட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘தில்லுக்கு துட்டு 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தீப்தி ஷெட்டி நடிக்கிறார். ராம்பாலா இயக்க, தீபக் குமார்பதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷபிர் இசையமைக்கிறார்.

 

வரும் 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் தொடக்க விழா இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.