Feb 26, 2018 04:48 AM

ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் - பாத்ரூமில் இறந்ததாக தகவல்

ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் - பாத்ரூமில் இறந்ததாக தகவல்

திருமண நிகழ்ச்சிக்காக துபாய்க்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்த நிலையில், அவர் பாத்ரூமில் விழுந்தததால் தான் மரணம் அடைந்தார் என்ற தகவல் துபாயில் பரவி வருகிறது.

 

துபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருக்கும் பாத் டப்பில் மயங்கிய நிலையில் அவர் கிடந்ததாகவும், பிறகு அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவமனை தரப்பில் உயிரிழந்த நிலையில் தான் ஸ்ரீதேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருமண நிகழ்ச்சிக்கு பிறகு போனி கபூரும், ஸ்ரீதேவியும் பேசிக் கொண்டிருந்தார்களாம். பின்னர் இரவு விருந்துக்கு செல்ல இருந்த ஸ்ரீதேவி, பாத்ரூம் சென்றுள்ளார். 15 நிமிடங்கள் ஆகியும் அவர் வெளியில் வராததால் போனி கபூர் கதவை தட்டியுள்ளார். எந்தவித பதிலும் இல்லாததால், உறவினர் ஒருவரை அழைத்து கதவை உடைத்து பார்த்திருக்கிறார். அப்போது ஸ்ரீதேவி மயங்கி கிடந்தது தெரிய வந்துள்ளத். உடனே அவரை மீட்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சென்றதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.