பட வாய்ப்பு இல்லாததால் பாதை மாறிய பிரபல நடிகை!

தமிழ் சினிமா ஹீரோயின்களில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகைகளில் சுனைனாவும் ஒருவர். ‘காதலி விழுந்தேன்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர், முன்னணி ஹீரோயினாவதற்கு எடுத்த முயற்சிகள் அத்தனையும் வீணாகப் போனது.
நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டு பெற்றாலும், சுனைனாவுக்கு ஆண்டி ஹீரோயின் வேடங்கள் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்திலும் அப்படி ஒரு வேடத்தில் தான் சுனைனா நடித்திருக்கிறார்.
தொடர்ந்து இரண்டாம் தரப்பு ஹீரோயினாகவே வாய்ப்பு வருவதால் ரொம்பவே அப்செட்டாகியுள்ள சுனைனா, தற்போது சினிமாவுக்கு சிறுது காலம் ஓய்வு கொடுத்துவிட்டு வேற்றுபாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளார்.
தற்போது, ரசிகர்களிடையே வெப் சீரிஸ் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதால், முன்னணி இயக்குநர்களும் நடிகர்களும் வெப் சீரிஸ் மீது ஆர்வல் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சுனைனாவும் ஒரு வெப் சீரிஸில் நடிக்க தொடங்கியுள்ளார். இதை ‘திருதிரு துறுதுறு’ படத்டை இயக்கிய ஜே.எஸ்.நந்தினி இயக்குகிறார்.
சமீபத்தில் தொடங்கிய இந்த வெப் சீரிஸின் மூலம் தனக்கு சினிமாவிலும் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு சுனைனா இருக்கிறாராம்.