சினிமாவுக்கு டாடா சொல்ல ரெடியாகும் திரிஷா - ஆனால் இது நடக்கனுமாம்!

கடந்த 13 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள திரிஷா, தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருவதோடு, ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்த திரிஷா, திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிக்க கூடாது என்று மாப்பிள்ளை வீட்டார் சொன்னதால், திருமணத்தை நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசவக்காலத்தில் மட்டுமே தான் நடிக்காமல் இருப்பேன், மற்றபடி தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருப்பேன், என்று கூறிய திரிஷா தற்போது சினிமாவுக்கு டாடா காட்டும் முடிவுக்கு வந்துவிட்டார்.
ஆனால், அதற்கு முன்பாக ஒன்று நடந்தாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, அஜித், விஜய், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா என்று முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்திருப்பவர், தற்போதைய விஜய் சேதுபதிக்கு கூட ஜோடியாக நடித்துவிட்டார். ஆனால், ரஜினிகாந்துடன் மட்டும் ஜோடியாக நடிக்கவில்லை. அது நடந்துவிட்டால் தான் சினிமாவில் இருந்து கூட போய் விடுவேன், என்று அவர் கூறியுள்ளார்.