Feb 27, 2018 06:58 AM

ரஜினிக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

ரஜினிக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை விரைவில் அறிவிக்க உள்ள ரஜினிகாந்த், மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நிர்வகித்து வருகிறார்.

 

இந்த நிலையில், அவர் தனது புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். ’பீட்சா’, ’ஜிகர்தண்டா’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார்.

 

‘2.0’, ’காலா’ என இரண்டு படங்கள் ரஜினியின் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்கு தயராக உள்ள நிலையில், அவரது புதிய படத்தின் அறிவிப்பும், அதன் இயக்குநராக இளம் இயக்குநரை அவர் தேர்வு செய்திருப்பதும், தமிழ் சினிமாவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து இந்த தகவல் கசிந்துள்ளது.