Mar 22, 2018 05:20 AM

அரசியல் கட்சி தொடக்கம் - விஷால் அதிரடி அறிவிப்பு!

அரசியல் கட்சி தொடக்கம் - விஷால் அதிரடி அறிவிப்பு!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ள விஷால், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய வேலை நிறுத்தம், தற்போது தமிழ் திரையுலகமே முடங்கிப் போகும் அளவுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது.

 

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பல சினிமா தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ள நிலையில், தங்களோட கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும், என்று விஷால் கூறியுள்ளார்.

 

இந்த நிலையில், புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் விஷால் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒரு எம்.எல்.ஏ-வை விட அதிகமாக சம்பாதிக்கிறேன். அவர்களை விட அதிக பாப்புலாரிட்டியோட இருக்கேன். இருந்தும் மக்களின் குரலை எதிரொலிக்கணும்னு நினைச்சு தான் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டேன். 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தில் இருந்தே வட சென்னையிஐ கவனிக்கிறேன். அங்கே உள்ள மக்களோட பிரச்சனைகள் எனக்குத் தெரியும். கட்சி தொடங்குவேனா இல்லையா என்ற என் அரசியல் நிலைப்பாட்டை 2019 தேர்தல் காலகட்டத்துல சொல்லுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.